» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அதிமுக நிர்வாகி தவெகவில் ஐக்கியம்!

ஞாயிறு 7, ஜூன் 2026 11:12:28 AM (IST)



தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியான பி. திருச்சிற்றம்பலம் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் பி சண்முகநாதனின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டவர் பி. திருச்சிற்றம்பலம். இவர் தூத்துக்குடி மாநகராட்சி அதிமுகவின் 39-ஆவது வட்டச் செயலாளராகவும், தெற்கு மாவட்ட அம்மா பேரவையின் இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக நிலவி வந்த அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலக முடிவு செய்தார்.

கட்சியிலிருந்து விலகிய பி. திருச்சிற்றம்பலம், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் த.வெ.க.வில் முறைப்படி இணைந்தார். சென்னை த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது அவருக்குக் கட்சியின் உறுப்பினர் அட்டை மற்றும் வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்த அரசியல் இணைப்பைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சிற்றம்பலத்தின் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் பலரும் மிக விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக தவெகவில் இணைந்து வருவது தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory