» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜவுளிக்கடை உரிமையாளரிடம் செல்போன் பறிப்பு: இருவர் அதிரடி கைது!
சனி 6, ஜூன் 2026 10:18:43 AM (IST)
தூத்துக்குடியில் ஜவுளிக்கடையில் நுழைந்து உரிமையாளரிடம் செல்போன் பறித்துவிட்டு, மற்றொரு பகுதியில் பைக்கைத் திருடியது தொடர்பாக இருவரை 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் தெற்கு காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் அலெக்சாண்டர் (42). இவர் தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 4-ஆம் தேதி இவரது கடைக்குத் துணி வாங்குவது போல இரண்டு நபர்கள் வந்துள்ளனர்.
அலெக்சாண்டர் அவர்களுக்குத் துணிகளைக் காட்டிக் கொண்டிருந்தபோது, அந்த நபர்கள் இருவரும் திடீரென அலெக்சாண்டரின் சட்டைப் பையில் இருந்த ரூ.10,000 மதிப்பிலான செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து அலெக்சாண்டர் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நேற்று சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இருவரைப் போலீசார் மறித்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (42) மற்றும் சண்முகபுரம் வண்ணார் 2-வது தெருவைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என்ற ஜான்சன் மகன் சுபாஷ் (28) என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவ்விருவரும்தான் கடந்த 4-ஆம் தேதி அலெக்சாண்டரின் ஜவுளிக்கடைக்குள் புகுந்து செல்போனைத் திருடிச் சென்றவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தூத்துக்குடி பாகம்பிரியாள் கோவில் தெருவைச் சேர்ந்த மந்திரம் மகன் சிவராம் (35) என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அந்த பைக்கையும் அவர்கள் கடந்த 4-ஆம் தேதியன்றே திருடிச் சென்று குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தியதும் அம்பலமானது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து திருடப்பட்ட பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறை அறிமுகம்: நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணங்கள் பதிவு
ஞாயிறு 7, ஜூன் 2026 8:39:26 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:01:17 PM (IST)

நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி-யாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:50:29 PM (IST)

சோதனைச் சாவடியில் கார் மோதி தலைமை காவலர் காயம்! ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு, கார் பறிமுதல்!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:31:29 PM (IST)

தூத்துக்குடியில் 3.300 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
ஞாயிறு 7, ஜூன் 2026 7:26:02 PM (IST)

பிள்ளையார்நத்தத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை
ஞாயிறு 7, ஜூன் 2026 7:19:30 PM (IST)










