» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
வெள்ளி 5, ஜூன் 2026 8:20:04 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தனியார் பள்ளிகளில், விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பாக மாவட்டத் தலைவர் ச.மாடசாமி மற்றும் மாவட்டச் செயலாளர் ர.ராம் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் "தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தியுள்ளபடி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் தாங்கள் வசூலிக்கும் முறையான கல்விக் கட்டண விபரங்களை, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் (Notice Board) வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டும் என்ற கறாரான உத்தரவு நடைமுறையில் உள்ளது.
ஆனால், தூத்துக்குடியில் இயங்கி வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இந்த அரசாணையை எள்ளளவும் மதிக்காமல், கட்டண விபரங்களை மறைத்துத் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக மாணவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து நடத்தி வரும் இத்தகைய சட்டவிரோதக் கட்டணக் கொள்ளை காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தரப் பெற்றோர்கள் கடுமையான பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பிரச்சனையில் தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாகத் தலையிட வேண்டும் என சங்கம் கோரியுள்ளது.
மாவட்ட அளவில் பிரத்யேக ஆய்வுக்குழு ஒன்றை அவசரமாக அமைத்து, அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறதா அல்லது கூடுதலாகப் பணம் பறிக்கப்படுகிறதா என்பதைத் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், விதிமுறைகளை மீறிக் கூடுதல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்வதுடன், அவர்கள் மீது தங்கு தடையின்றித் கடுமையான சட்டப்படியான மேல்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
VikasaJun 5, 2026 - 04:11:53 PM | Posted IP 104.2*****
Check Vikasa Millerpuram.... Charging Exorbitantly
மேலும் தொடரும் செய்திகள்

பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறை அறிமுகம்: நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணங்கள் பதிவு
ஞாயிறு 7, ஜூன் 2026 8:39:26 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:01:17 PM (IST)

நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி-யாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:50:29 PM (IST)

சோதனைச் சாவடியில் கார் மோதி தலைமை காவலர் காயம்! ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு, கார் பறிமுதல்!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:31:29 PM (IST)

தூத்துக்குடியில் 3.300 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
ஞாயிறு 7, ஜூன் 2026 7:26:02 PM (IST)

பிள்ளையார்நத்தத்தில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை
ஞாயிறு 7, ஜூன் 2026 7:19:30 PM (IST)











vikasaJun 6, 2026 - 11:49:30 AM | Posted IP 172.7*****