» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு இணையவழி இ-பட்டாக்கள் உடனடியாக வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்விற்கு அல்லிகுளம் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம் ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்டுப் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்.
ஓட்டப்பிடாரம் வட்டத்திற்கு உட்பட்ட கீழமங்கலம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், தாங்கள் முறைப்படி பத்திரப்பதிவு செய்த நிலத்திற்கு நீண்ட நாட்களாகப் பட்டா வழங்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த விவகாரம் குறித்து ஜமாபந்தி அலுவலரான தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துத் முறையிட்டனர்.
பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கை மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்த தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம், இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உரிய ஆவணங்களைச் சரிபார்க்கக் கறாரான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில், ஜமாபந்தியில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது வருவாய்த்துறை ஆவணங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி உடனடியாகச் சரிபார்க்கப்பட்டு, தேங்கியிருந்த நிலப் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 2 பயனாளிகளுக்குத் தங்களது நிலத்திற்கான புதிய இணையவழி இ-பட்டாக்கள் உடனடியாகத் தயார் செய்யப்பட்டு, இன்று அவர்கள் கரங்களில் முறைப்படி வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிப்காட் தனி வட்டாட்சியர் சந்திரன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இசக்கி ராஜா, மண்டலத் துணை வட்டாட்சியர் மரிய வியாகுல ஜெயா, வருவாய் ஆய்வாளர் நல்லதம்பி மற்றும் கீழமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மாலா உள்ளிட்ட வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களும், கிராம உதவியாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு செய்துங்கநல்லூரில் உற்சாக வரவேற்பு
புதன் 17, ஜூன் 2026 12:35:50 PM (IST)

போலீஸ் வேலைக்கு செல்ல முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை!
புதன் 17, ஜூன் 2026 11:53:17 AM (IST)

விளாத்திகுளம் அருகே மோட்டார் பைக் தீ வைத்து எரிப்பு
புதன் 17, ஜூன் 2026 11:41:42 AM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 19-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 17, ஜூன் 2026 7:37:14 AM (IST)

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் : மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதன் 17, ஜூன் 2026 7:32:01 AM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பரிதாப பலி!
புதன் 17, ஜூன் 2026 7:27:37 AM (IST)









