» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாட்டுத்தாவணி டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல் : தமிழக முதல்வருக்கு வியாபாரிகள் சங்கம் நன்றி!
செவ்வாய் 2, ஜூன் 2026 3:38:22 PM (IST)
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகை மூட நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு வ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தினர் நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாட்டுத்தாவணி பகுதியில் நீண்ட நாட்களாகப் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுபானக் கடை இன்று நிரந்தரமாக மூடப்பட்டது. இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் வியாபாரிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பல்வேறு சட்டம்-ஒழுங்கு சிரமங்கள் ஏற்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து, கடையை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி, கடந்த மே 13, 2026 அன்றுவ.உ.சி. மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விரிவான கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வியாபாரிகள் சங்கம் அளித்த அந்த மனுவானது முதலமைச்சரின் தனிப்பிரிவினால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மாட்டுத்தாவணி டாஸ்மாக் கடை இன்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டது.
அப்பகுதி வியாபாரிகள் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, டாஸ்மாக் கடையை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், மற்றும் இப்பிரச்சினையை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண உதவிய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஏ. ஸ்ரீநாத் ஆகியோருக்கு வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெக நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 4:19:42 PM (IST)

ஆட்சியருடன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சந்திப்பு : முக்கியக் கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பு!
செவ்வாய் 2, ஜூன் 2026 3:22:21 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, ஜூன் 2026 12:50:47 PM (IST)

தூத்துக்குடியில் முதியோர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் - ஊழியர்கள் அசத்தல்!
செவ்வாய் 2, ஜூன் 2026 12:28:04 PM (IST)

தவெக நிர்வாகிகளின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்: பி.கீதா ஜீவன் அறிக்கை!
செவ்வாய் 2, ஜூன் 2026 12:00:15 PM (IST)

தந்தை கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:52:25 AM (IST)










