» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தவெக நிர்வாகிகளின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்: பி.கீதா ஜீவன் அறிக்கை!

செவ்வாய் 2, ஜூன் 2026 12:00:15 PM (IST)



இளம்பெண் ஒருவர் தவெக நிர்வாகிகளால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன், இச்சம்பவம் குறித்து தமிழக முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தவெக கட்சி நிர்வாகிகள் அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்விகள்:

சட்டம்-ஒழுங்கு மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் அவர்களுக்கு அவர் விடுத்துள்ள கண்டனக் கேள்விகள் பின்வருமாறு:

"தேர்தல் முடியும் வரை சம்பந்தமே இல்லாமல் அப்போதைய முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதியாரைக் குற்றம் சாட்டிப் பொய்ச்செய்திகளைப் பரப்பினீர்களே? தற்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை உங்கள் தவெக கட்சி நிர்வாகிகள் இருவரே மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கும் நாங்கள் ஆறு மாதம் கழித்துத் தான் கேள்வி கேட்க வேண்டுமா முதல்வர் விஜய் அவர்களே?"

"இதுதான் உங்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு செயல்படுகின்ற லட்சணமா? எதற்கெடுத்தாலும் 6 மாதம் அவகாசம் வேண்டுமென்றால், அந்த இடைப்பட்ட காலகட்டத்தில் நடக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது?"

"பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவோம் என்று வாய்ச்சவுடால் விட்டு ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இந்த உன்னதப் பாதுகாப்புக் குறைபாட்டிற்கு இப்போது என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?" எனத் தனது அறிக்கையில் பி.கீதா ஜீவன் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory