» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:52:25 AM (IST)
மெஞ்ஞானபுரம் அருகே தந்தை கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள நடுகாளான்குடியிருப்பு கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகன் சிவனேஷ் (19). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை ஸ்ரீதர் தொடர்ந்து கண்டித்து, ஒழுங்காக வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தந்தை தன்னைத் திட்டி கண்டித்ததால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையிலும், மனமுடைந்த நிலையிலும் சிவனேஷ் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக ஜே.ஜே. நகர் காட்டுப் பகுதிக்குச் சென்ற சிவனேஷ், அங்கு தான் மறைத்து வைத்திருந்த பயங்கரமான பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் காவல் துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த சிவனேஷின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இத்தற்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெக நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 4:19:42 PM (IST)

மாட்டுத்தாவணி டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல் : தமிழக முதல்வருக்கு வியாபாரிகள் சங்கம் நன்றி!
செவ்வாய் 2, ஜூன் 2026 3:38:22 PM (IST)

ஆட்சியருடன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சந்திப்பு : முக்கியக் கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பு!
செவ்வாய் 2, ஜூன் 2026 3:22:21 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, ஜூன் 2026 12:50:47 PM (IST)

தூத்துக்குடியில் முதியோர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் - ஊழியர்கள் அசத்தல்!
செவ்வாய் 2, ஜூன் 2026 12:28:04 PM (IST)

தவெக நிர்வாகிகளின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்: பி.கீதா ஜீவன் அறிக்கை!
செவ்வாய் 2, ஜூன் 2026 12:00:15 PM (IST)










