» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்: ஆட்சியர் விஷு மகாஜன் மனுக்களைப் பெற்றார்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:44:49 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 'ஜமாபந்தி' பணி இன்று துவங்கியது. ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கணக்கு முடிப்பு மற்றும் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பசலி 1435-ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் முடிவு செய்யும் வருடாந்திர 'ஜமாபந்தி' பணி இன்று துவங்கியது. இதன் முதற்கட்டமாக ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கணக்கு முடிப்பு மற்றும் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், ஜமாபந்தி காலத்தில் பெறப்படும் தகுதியான அனைத்து மனுக்கள் மீதும் எவ்விதத் தாமதமும் இன்றி, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உரியத் துரித சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஏரல் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை சார்ந்த கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் ஏரல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெக நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 4:19:42 PM (IST)

மாட்டுத்தாவணி டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல் : தமிழக முதல்வருக்கு வியாபாரிகள் சங்கம் நன்றி!
செவ்வாய் 2, ஜூன் 2026 3:38:22 PM (IST)

ஆட்சியருடன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சந்திப்பு : முக்கியக் கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பு!
செவ்வாய் 2, ஜூன் 2026 3:22:21 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, ஜூன் 2026 12:50:47 PM (IST)

தூத்துக்குடியில் முதியோர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் - ஊழியர்கள் அசத்தல்!
செவ்வாய் 2, ஜூன் 2026 12:28:04 PM (IST)

தவெக நிர்வாகிகளின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்: பி.கீதா ஜீவன் அறிக்கை!
செவ்வாய் 2, ஜூன் 2026 12:00:15 PM (IST)










