» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்சியருடன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சந்திப்பு : முக்கியக் கோரிக்கைகள் குறித்து மனு அளிப்பு!
செவ்வாய் 2, ஜூன் 2026 3:22:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் முக்கியப் பிரதிநிதிகள் மற்றும் அரசு நலவாரிய உறுப்பினர்கள் நேற்று நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் துணைச் செயலாளரும் தூத்துக்குடி மாவட்டத் தலைவருமான பேர்சில், மாநில மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் மெய்கண்டன், (SIDDS) மாவட்டச் செயலாளர் அழகுலட்சுமி, பாண்டி செல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகள் அடங்கிய விரிவான கோரிக்கை மனு ஒன்றினையும் பிரதிநிதிகள் அவரிடம் நேரில் அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன், மாற்றுத்திறனாளிகளின் அனைத்துத் தகுதியான கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரியத் துரித நடவடிக்கை மேற்கொள்வதாகச் சங்கப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெக நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
செவ்வாய் 2, ஜூன் 2026 4:19:42 PM (IST)

மாட்டுத்தாவணி டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல் : தமிழக முதல்வருக்கு வியாபாரிகள் சங்கம் நன்றி!
செவ்வாய் 2, ஜூன் 2026 3:38:22 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, ஜூன் 2026 12:50:47 PM (IST)

தூத்துக்குடியில் முதியோர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் - ஊழியர்கள் அசத்தல்!
செவ்வாய் 2, ஜூன் 2026 12:28:04 PM (IST)

தவெக நிர்வாகிகளின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்: பி.கீதா ஜீவன் அறிக்கை!
செவ்வாய் 2, ஜூன் 2026 12:00:15 PM (IST)

தந்தை கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:52:25 AM (IST)










