» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்: தூத்துக்குடி ஸ்ரீநாத் உட்பட 23 பேர் பதவியேற்பு
வியாழன் 21, மே 2026 10:22:37 AM (IST)

தமிழ்நாடு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதி உறுப்பினர் ஸ்ரீநாத் உள்பட 23பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனிடையே, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் விஜய்யின் நண்பரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ.வுமான ஸ்ரீநாத் உள்பட 23பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ ஆன ராஜேஷ் குமாா், மேலூா் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோா் அமைச்சா்களாக பதவியேற்றுள்ளனர்.
தூத்துக்குடி - ஸ்ரீநாத், அவிநாசி - எஸ். கமலி, குமாரபாளையம் - சி. விஜயலட்சுமி, காஞ்சிபுரம் - ஆர்.வி. ரஞ்சித்குமார், கும்பகோணம்- வினோத், திருவாடானை - ராஜீவ், கடலூர் - பி. ராஜ்குமார், அரக்கோணம் - வி. காந்திராஜ், ஒட்டப்பிடாரம் - மதன் ராஜா. பி, ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி. கே, கிள்ளியூர் - ராஜேஷ் குமார். எஸ், ஈரோடு கிழக்கு - எம். விஜய் பாலாஜி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
ராசிபுரம் - லோகேஷ் தமிழ் செல்வன், சேலம் தெற்கு - விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் - ரமேஷ், மேலூர் - விஸ்வநாதன், வேளச்சேரி - குமார், கோவை வடக்கு - சம்பத் குமார், அறந்தாங்கி - முகமது ஃபர்வாஸ், தாம்பரம் - சரத்குமார், ராதாகிருஷ்ணன் நகர் - மேரி வில்சன், கிணத்துக்கடவு - விக்னேஷ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)








