» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி: மேயர் ஜெகன் பெரியசாமி கோப்பை வழங்கினார்!
ஞாயிறு 10, மே 2026 9:20:08 PM (IST)

தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணி நகர் சி.எம்.என். பாய்ஸ் கிளப் சார்பில் 2-ஆம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
முன்னாள் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் பி.எஸ்.டி.எஸ்.டி. உதயசங்கர் நினைவு கோப்பைக்காக இந்தப் போட்டிகள் சின்னமணி நகர் பூங்காவில் நடைபெற்றன. இரண்டு நாட்கள் நடந்த இந்தத் தொடரில் தமிழகம் முழுவதிலிருந்து மொத்தம் 14 அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியை முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி மாரி பாய்ஸ் கிளப் அணி முதலிடம் பிடித்தது. சென்னை பனிமலர் அணி இரண்டாமிடம், கோவில்பட்டி லயன்ஸ் வாலிபால் கிளப் மூன்றாமிடம், தூத்துக்குடி கால்டுவெல் வாலிபால் கிளப் நான்காமிடம் பிடித்தன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பி.எஸ்.டி.எஸ். குரூப் ஆஃப் கம்பெனிஸ் இயக்குனர் டி. வேல்சங்கர் தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதலிடம் பிடித்த மாரி பாய்ஸ் கிளப் அணிக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசு மற்றும் உதயசங்கர் நினைவு கோப்பையை மேயர் வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த சென்னை பனிமலர் அணிக்கு ரூ. 25,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
முன்னதாக அபிலாஷ் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் 34-வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரமேஷ் குமார், தொழிலதிபர் பிராங்கிளின், மேயர் நேர்முக உதவியாளர் ஜெஸ்பர் மற்றும் சி.எம்.என். வாலிபால் கிளப் நிர்வாகிகள் ராஜா, சச்சின் பெல், அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கணவருடன் பைக்கில் சென்றபோது சோகம்: டயரில் துப்பட்டா சிக்கி இளம் பெண் பலி!
ஞாயிறு 10, மே 2026 9:47:06 PM (IST)

தூத்துக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை : மே 23 வரை விண்ணப்பிக்கலாம்!
ஞாயிறு 10, மே 2026 8:24:49 PM (IST)

விஜய் முதல்வர்: தூத்துக்குடியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
ஞாயிறு 10, மே 2026 12:36:05 PM (IST)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 10, மே 2026 12:27:59 PM (IST)

அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை : மே 29-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஞாயிறு 10, மே 2026 9:58:52 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)










