» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவருடன் பைக்கில் சென்றபோது சோகம்: டயரில் துப்பட்டா சிக்கி இளம் பெண் பலி!

ஞாயிறு 10, மே 2026 9:47:06 PM (IST)

கயத்தாறு அருகே கணவருடன் பைக்கில் சென்றபோது, டயரில் துப்பட்டா சிக்கி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் தடியம்பட்டி கிராமம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி மகாலட்சுமி (25). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை செல்லப்பாண்டி மற்றும் மகாலட்சுமி இருவரும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காகத் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, மீண்டும் இருவரும் தங்களது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கயத்தாறு - நாகலாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அமர்ந்திருந்த மகாலட்சுமியின் துப்பட்டா எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில், மகாலட்சுமி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மகாலட்சுமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், மகாலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கயத்தாறு காவல் நிலையப் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மகாலட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory