» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோயிலில் சித்திரை திருவோண விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!

சனி 9, மே 2026 8:35:54 PM (IST)



கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோயிலில், சித்திரை திருவோணத்தை முன்னிட்டு நடராஜர் அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டாரிமங்கலம் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோயிலில், சித்திரை திருவோணத்தை முன்னிட்டு நடராஜர் அபிஷேகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை 07:30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் பல்வேறு யாக பூஜைகளுடன் வழிபாடுகள் தொடங்கின. காலை 9 மணி முதல் ஸ்ரீ அழகிய கூத்தர் மன்றத்தினர் 'கரு முதல் திரு வரை' எனத் திருமுறைப் பாராயணம் பாடினர்.

பகல் 10:30 மணி முதல் சிவகாமி அம்பாள், ஸ்ரீ அழகிய கூத்தர் மற்றும் பரிவார தெய்வங்களுக்குப் பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ அழகிய கூத்தர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பகல் 12:00 மணிக்குச் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழு தலைவர், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory