» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி : காவல்துறையில் சோகம்!

சனி 9, மே 2026 7:23:00 PM (IST)

தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் நிகழ்ந்த பைக் விபத்தில் முறப்பநாடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த இளைஞர், பரிதாபமாக உயிரிழந்தார். 

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள அரவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகன் வேல்பாண்டி (32). இவர் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு  காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

நேற்று வேல்பாண்டி தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காகத் தனது மோட்டார் சைக்கிளில் முறப்பநாடு நோக்கி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் நெல்லை கே.டி.சி நகர் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஸ்கூட்டரில் வந்த ஒரு பெண், எதிர்பாராத விதமாக வேல்பாண்டியின் பைக் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேல்பாண்டிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்பாண்டி, இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்துப் பாளையங்கோட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஸ்கூட்டர் ஓட்டிய பெண் குறித்தும், விபத்து நடந்த விதம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 32 வயதே ஆன இளம் அதிகாரி விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் சக காவலர்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory