» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ராகுல் காந்திக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி ராஜினாமா அறிவிப்பு!
சனி 9, மே 2026 12:51:21 PM (IST)
காங்கிரஸ் கட்சியினை ராகுல்காந்தி தவறாக வழிநடத்துவதாகக் கூறி தூத்துக்குடியில் காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் தனது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "நான் கடந்த 1988 முதல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். தூத்துக்குடியில் 1996 முதல் நகர் மன்ற உறுப்பினராகவும், பின்பு மாமன்ற உறுப்பினராகவும் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். திமுக கூட்டணி சார்பாக 2 முறையும், காங்கிரஸ் சார்பாக தனித்து போட்டியிட்டு 3 முறையும் மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறேன். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறேன். மாநகராட்சி காங்கிரஸ் கொறடாவாகவும் பொறுப்பு வகித்து வருகிறேன்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராகுல் காந்தியின் தவறான வழிகாட்டுதலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறான வழிகாட்டுதலாலும் இந்த முடிவை எடுக்கிறேன். எனது மாநகராட்சி கவுன்சிலர் பதவியைத் தவிர அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை : மே 23 வரை விண்ணப்பிக்கலாம்!
ஞாயிறு 10, மே 2026 8:24:49 PM (IST)

விஜய் முதல்வர்: தூத்துக்குடியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
ஞாயிறு 10, மே 2026 12:36:05 PM (IST)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 10, மே 2026 12:27:59 PM (IST)

அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை : மே 29-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஞாயிறு 10, மே 2026 9:58:52 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)

குடோன் வசதி இல்லாததால் மழையில் நனைந்து 500 நெல் மூட்டைகள் நாசம் : விவசாயிகள் கவலை!
ஞாயிறு 10, மே 2026 9:38:57 AM (IST)










