» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகன் இறந்த துக்கத்தில் தந்தை தீக்குளித்து தற்கொலை!
சனி 9, மே 2026 10:52:55 AM (IST)
முறப்பநாடு அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (82). இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களது ஒரே மகனான சண்முகவேல், கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஒரே மகனை இழந்த துக்கத்தில் சுப்பிரமணியன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லையே என்ற விரக்தியில் இருந்த சுப்பிரமணியன், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி: மேயர் ஜெகன் பெரியசாமி கோப்பை வழங்கினார்!
ஞாயிறு 10, மே 2026 9:20:08 PM (IST)

தூத்துக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை : மே 23 வரை விண்ணப்பிக்கலாம்!
ஞாயிறு 10, மே 2026 8:24:49 PM (IST)

விஜய் முதல்வர்: தூத்துக்குடியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
ஞாயிறு 10, மே 2026 12:36:05 PM (IST)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 10, மே 2026 12:27:59 PM (IST)

அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை : மே 29-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஞாயிறு 10, மே 2026 9:58:52 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)










