» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி - அதிர்ச்சியில் நிலைதடுமாறி விழுந்த பெண்!
சனி 9, மே 2026 10:43:37 AM (IST)
எட்டயபுரம் அருகே இளம்புவனம் ஓடை பாலம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு மகன் பாண்டியராஜ் (70). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் எட்டயபுரம் சென்றுவிட்டு, மீண்டும் தனது ஊருக்குத் திரும்புவதற்காக எட்டயபுரம் - கோவில்பட்டி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
இளம்புவனம் கிராமத்திற்கு முன்பாக உள்ள ஓடைப் பாலத்தின் அருகே பாண்டியராஜ் வந்தபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது. இந்த விபத்தில் தலையில் பலத்த ரத்தக் காயமடைந்த பாண்டியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்தச் சமயம், எட்டயபுரத்தில் இருந்து மாதாபுரம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஸ்டெல்லா மேரி (32) என்ற பெண், சாலையில் ரத்த வெள்ளத்தில் முதியவர் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் நிலைகுலைந்து தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்குக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த பாண்டியராஜின் உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற வாகனம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி: மேயர் ஜெகன் பெரியசாமி கோப்பை வழங்கினார்!
ஞாயிறு 10, மே 2026 9:20:08 PM (IST)

தூத்துக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை : மே 23 வரை விண்ணப்பிக்கலாம்!
ஞாயிறு 10, மே 2026 8:24:49 PM (IST)

விஜய் முதல்வர்: தூத்துக்குடியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
ஞாயிறு 10, மே 2026 12:36:05 PM (IST)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 10, மே 2026 12:27:59 PM (IST)

அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை : மே 29-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஞாயிறு 10, மே 2026 9:58:52 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)










