» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி: மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்
சனி 2, மே 2026 4:27:08 PM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய வளாகத்தில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்த உத்தரவை கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) பிறப்பித்துள்ளது. இந்தப் புதிய பள்ளியில் 2026-27 கல்வியாண்டிலிருந்து முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தூத்துக்குடி, பாரதி நகர், ஹார்பர் எஸ்டேட் பகுதியில் உள்ள ஹார்பர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் இந்தப் பள்ளி செயல்படும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் வ.உ.சி. துறைமுக ஆணையமே ஏற்கும். மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, கேந்திரிய வித்யாலயா சங்கதனின் 'புராஜெக்ட் செக்டார்' விதிகளின்படி முன்னுரிமை அளிக்கப்படும். நிலம் மற்றும் தற்காலிகக் கட்டிட ஏற்பாடுகள் நிறைவடைந்த 30 நாட்களுக்குள் மாணவர் சேர்க்கை செயல்முறையை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தூத்துக்குடி பகுதியில் உள்ள துறைமுகப் பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 6ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி: வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
சனி 2, மே 2026 5:03:13 PM (IST)

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)









