» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா

சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தென்னகத்தில் 'தாமிரபரணி அகோபிலம்' என்று போற்றப்படும் முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், நரசிம்ம ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் லட்சுமி நரசிம்மருக்கெனத் தனியாக அமைந்துள்ள ஒரு சில ஆலயங்களில் இதுவும் ஒன்று என்பதால், இத்தலம் ஆன்மீக ரீதியாக மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. சில காலங்களாகப் போதிய வழிபாடுகள் இன்றி இருந்த இந்த ஆலயத்தில், தற்போது லட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபா சார்பில் சுவாமிக்கு நித்திய பூஜைகளும், பிரதோஷ வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு ஹோமம் மற்றும் பகவானுக்கு நீராஞ்சன பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லட்சுமி நரசிம்மர் பிரம்மாண்ட ராம விநாயகர் வீரபாண்டீஸ்வரர் சிவகாமி அம்பாள் பைரவர் ஆகிய தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து லட்சுமி நரசிம்மருக்குச் சிறப்பு கோஷ்டி வழிபாடுகள் முறைப்படி நடத்தப்பட்டன.

விழாவில் லட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபாவின் தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சுவாமிநாதன், அறங்காவலர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, சேஷப்பன், வள்ளிநாயகம் மற்றும் குணவதியம்மன் கமிட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் உட்படத் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை வெங்கடாச்சாரி வாத்தியார், அனந்த ராம அய்யங்கார், சேகர் கம்பர் உள்ளிட்ட அர்ச்சகர்கள் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory