» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)
திருச்செந்தூர் அருகே பெட்ரோல் பங்கில், ஊழியர் தூங்கிய நேரத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் பெட்ரோல் மற்றும் 2 செல்போன்களைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பாரதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம் (45). இவர் திருச்செந்தூர் - அடைக்கலாபுரம் சாலையில் 'இந்தியன் ஆயில்' பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை நேரத்தில், பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த ஊழியர் எதிர்பாராதவிதமாக உறங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், பெட்ரோல் பங்கிற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் தாங்களாகவே சுமார் 17 லிட்டர் பெட்ரோலைத் திருடியதுடன், அங்கிருந்த ஊழியரின் இரண்டு செல்போன்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காலையில் ஊழியர் எழுந்து பார்த்தபோது பெட்ரோல் மற்றும் செல்போன்கள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உரிமையாளர் சண்முகம் அளித்த புகாரின் பேரில், திருச்செந்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)

தீராத வயிற்று வலி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
சனி 2, மே 2026 10:31:51 AM (IST)

தூத்துக்குடியில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி - முகவர்கள் தவிப்பு!
சனி 2, மே 2026 9:01:07 AM (IST)









