» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி

சனி 2, மே 2026 10:38:14 AM (IST)

தூத்துக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சவலாபேரி புளியம்பட்டியைச் சேர்ந்தவர் குமாரவேல் (48). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவரான இவர், நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் தெய்வச்செயல்புரம் சந்திப்பு அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.அப்போது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த பைக் எதிர்பாராத விதமாகக் குமாரவேல் மீது மோதியது. 

இந்த விபத்தில் தலையில் பலத்த இரத்தக் காயம் அடைந்த அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து பைக்கை ஓட்டி வந்த மேலக்கூட்டுடன்காடு, மேற்குத் தெருவைச் சேர்ந்த வெனில்குமார் (21) என்பவர் மீது புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory