» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தங்கத் தேரில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்: சித்ரா பௌர்ணமி விழா கோலாகலம்!

சனி 2, மே 2026 8:42:28 AM (IST)


சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அத்துடன் பத்து நாட்கள் நடைபெற்று வந்த சித்திரை வசந்த திருவிழாவும் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம் அதிகாலை 5.30 மணிக்கும், உதயமார்த்தாண்ட அபிஷேகம் காலை 6 மணிக்கும் நடைபெற்றது. கோடை விடுமுறை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.

இரவு நடைபெற்ற விழாவில், வள்ளி - தேவசேனா அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதர் தங்கத் தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்துத் தங்கத் தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்கிய சித்திரை வசந்த திருவிழா, 10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. மதியம் உச்சிகால பூஜையைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்குச் சாயரட்சை தீபாராதனைக்குப் பின் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory