» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மணிமதிக்கு, பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, மகிழ்வோர் மன்ற நிறுவனர் டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் தலைமை வகித்தார். மகிழ்வோர் மன்ற இயக்குனர் ஜான்கணேஷ் முன்னிலை வகிக்க, நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வின் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மணிமதி அவர்களுக்குப் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
விழாவில் பசும்பொன் கல்வி அறக்கட்டளை தலைவர் பரமசிவம், திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகள் கருத்தப்பாண்டி மற்றும் நம் சீனிவாசன், ஜெ. டிவி கேபிள் ராஜு, முத்தமிழ் மன்ற தலைவர் வரகவி முருகேசன், மற்றும் இலக்கியச் சாரல் தினகரன், கம்பன் கழகச் செயலாளர் சரவணச்செல்வன், கல்லூரி பேராசிரியர் நவநீதன், மகிழ்வோர் மன்ற காப்பாளர்கள் சேர்ம துரை மற்றும் துரைராஜ், ஆசிரியர்கள் அருணாசலம் மற்றும் கனகராஜ், இளையரசனேந்தல் உதவி தலைமை ஆசிரியர் முருகசரஸ்வதி மற்றும் விநாயக சுந்தரி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுத் தலைமை ஆசிரியரைப் பாராட்டிப் பேசினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)

தீராத வயிற்று வலி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
சனி 2, மே 2026 10:31:51 AM (IST)









