» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிப்பு: பயணிகள் மகிழ்ச்சி!

வெள்ளி 1, மே 2026 10:47:51 AM (IST)

தூத்துக்குடி மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை, பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்களின் கால அட்டவணை மற்றும் இயக்கப்படும் நாட்கள் குறித்த விவரம் வருமாறு:

தூத்துக்குடி - தாம்பரம்  (வண்டி எண்: 06018)

தூத்துக்குடியில் இருந்து திங்கள் கிழமைகளில் புறப்படும் இந்த ரயில், ஜூன் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புறப்படும் நாட்கள்: மே 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1, 8 (திங்கள் கிழமைகள்).

நேரம்: தூத்துக்குடியில் இருந்து இரவு 11:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும்.

தாம்பரம் - தூத்துக்குடி (வண்டி எண்: 06017)

தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் புறப்படும் இந்த ரயில், ஜூன் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புறப்படும் நாட்கள்: மே 5, 12, 19, 26 மற்றும் ஜூன் 2, 9 (செவ்வாய்க்கிழமைகள்).

நேரம்: தாம்பரத்தில் இருந்து மாலை 03:30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 04:30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

முக்கிய நிறுத்தங்கள்: இந்த சிறப்பு ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

பயணிகள் நலச் சங்கம் நன்றி: கோடைக்காலப் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, இந்தச் சிறப்பு ரயில்களைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

தூத்துக்குடிக்காரன்மே 2, 2026 - 12:29:35 PM | Posted IP 172.7*****

ரயில்வே நிர்வாகத்திற்கு மிக்க நன்றி. கடந்த சில ஆண்டுகளாக தூத்துக்குடியிலிருந்து காலை நேரத்தில் மதுரைக்கு செல்லவேண்டுமானால் முதலில் வஞ்சி மணியாச்சி பாசஞ்சர் ரயிலில் சென்று பின்பு நாகர்கோவில்-கோயம்புத்தூர் பகல் நேர ரயிலுக்கோ அல்லது குருவாயூர்-சென்னை ரயிலுக்கோ மாறவேண்டிய சூழலே உள்ளது. இந்த பயணமானது மூன்றரை மணிநேரத்திற்கு மேலாக நீள்கிறது. அதே சமயம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு மாலை நேரத்தில் (மதுரையிலிருந்து மதியம் 3மணிக்கு கிளம்பும் வகையில் இல்லை) ரயில்கள் இல்லை. மீண்டும் தூத்துக்குடி வர சென்னை-குருவாயூர் ரயிலில் அல்லது ஈரோடு-செங்கோட்டை ரயிலில் மதுரையிலிருந்து புறப்பட்டு வஞ்சி மணியாச்சி வந்து பின்பு இரவு 9 மணிக்கு மணியாச்சி-தூத்துக்குடி பாசஞ்சர் ரயிலில் புறப்பட்டு இரவில் 10மணியளவில்தான் தூத்துக்குடி வந்து சேர முடியும். எனவே ரயில்வே நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு, தூத்துக்குடியிலிருந்து காலை நேரத்தில் 8மணிக்குள் புறப்படுமாறு மதுரைக்கு தினசரி நேரடி பாசஞ்சர் சேவையும் அதேநேரத்தில் மதியம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு 3மணிமுதல் 3:30 மணிக்குள் புறப்படுமாறு தினசரி நேரடி பாசஞ்சர் ரயில் சேவையும் இயக்கினால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory