» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு - போலீஸ் விசாரணை!

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:38:11 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் ஒருவரை வழிமறித்துக் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி பாரதி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில், தினேஷ் தனது நண்பர் தேவராஜ் (26) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பிரையண்ட் நகர் 10-வது தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவர்களைப் பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், தினேஷின் வாகனத்தை வழிமறித்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி தினேஷை மிரட்டிய அந்த நபர்கள், அவரிடமிருந்த ரூ. 10,000 மதிப்புள்ள செல்போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட தினேஷ் இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அந்த இரு நபர்கள் யார்? அவர்கள் எந்த வாகனத்தில் வந்தார்கள்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory