» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: 4-ஆம் திருநாளில் சுவாமி, அம்பாள் ரத வீதி உலா!
சனி 25, ஏப்ரல் 2026 8:33:48 AM (IST)

தூத்துக்குடி நகரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் நான்காம் திருநாளான நேற்று இரவு சுவாமி மற்றும் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் நான்காம் நாளான நேற்று மாலை, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 8 மணி அளவில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் (நந்தி வாகனம்) சுவாமி சங்கர ராமேஸ்வரரும், அம்பாள் பாகம்பிரியாளும் எழுந்தருளினர். மேள தாளங்கள் முழங்க, விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும் அம்பாளும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தனர்.
சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வாகனமான ரிஷப வாகனத்தில் இறைவன் வீதி உலா வந்ததைக் காண ரத வீதிகளில் திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். பக்தர்கள் தங்களது வீடுகளின் முன்பு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி 4வது ரயில்வே கேட்டில் வேன் மோதி விபத்து : கேட் தற்காலிகமாக மூடல்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 12:19:38 PM (IST)

பைக் விபத்து: மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 11:02:07 AM (IST)

கோவில் கொடை விழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு – 3 பேர் கைது!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:17:20 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு: திரேஸ்புரத்தில் அலைமோதிய கூட்டம்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:08:02 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: 5-ஆம் திருநாளில் கற்பக விருட்சம் - காமதேனு வாகனங்களில் வீதி உலா!
சனி 25, ஏப்ரல் 2026 9:36:06 PM (IST)

நாசரேத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம் தொடக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 9:29:37 PM (IST)







