» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: 5-ஆம் திருநாளில் கற்பக விருட்சம் - காமதேனு வாகனங்களில் வீதி உலா!
சனி 25, ஏப்ரல் 2026 9:36:06 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் ஐந்தாம் திருநாளான இன்று இரவு, கற்பக விருட்சம் மற்றும் காமதேனு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று இரவு, அலங்கரிக்கப்பட்ட கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி சங்கர ராமேஸ்வரரும், காமதேனு வாகனத்தில் அம்பாள் பாகம்பிரியாளும் எழுந்தருளினர். முன்னதாக சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும் அம்பாளும் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தனர். மங்கல இசை முழங்க, ரத வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி 4வது ரயில்வே கேட்டில் வேன் மோதி விபத்து : கேட் தற்காலிகமாக மூடல்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 12:19:38 PM (IST)

பைக் விபத்து: மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 11:02:07 AM (IST)

கோவில் கொடை விழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு – 3 பேர் கைது!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:17:20 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு: திரேஸ்புரத்தில் அலைமோதிய கூட்டம்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:08:02 AM (IST)

நாசரேத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம் தொடக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 9:29:37 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 30-ல் தேரோட்டம் – முன்னேற்பாடுகள் தயார்!
சனி 25, ஏப்ரல் 2026 7:35:52 PM (IST)







