» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம் தொடக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 9:29:37 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம் இன்றஔ தொடங்கியது.
நாசரேத்தில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் கோடை கால கால்பந்து பயிற்சி முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. வரும் மே மாதம் 7-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முகாமின் தொடக்க விழாவிற்குத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ் தலைமை வகித்து, மாணவர்களுக்குப் பயிற்சி குறித்த ஆலோசனைகளை வழங்கினார். உதவி குரு தனசேகர் ராஜா ஆரம்ப ஜெபம் செய்து முகாமினைத் தொடங்கி வைத்தார்.
மர்காஷிஸ் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜாசிங் ரோக்லண்ட் மற்றும் மாரி, ஸ்டெப்பின், ஜெபஸ், ஹெவிட் ஆகியோர் மாணவர்களுக்குப் பயிற்சியாளர்களாகச் செயல்படுகின்றனர்.
தொடக்க விழாவில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தாளாளர் மாமல்லன், வெஸ்ட் எண்ட் கிளப் நிர்வாகிகள் ஜாண்சன், ராபர்ட்சன், வில்சன், பவுளி ஜெயச்சந்திரன், மின்துறை அதிகாரி ஜான் மற்றும் வினோத், நசரேயன், ஜெர்சோம், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கால்டுவெல், தனபால், சுஜித் செல்வசுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளைப் பள்ளி தாளாளர் சுதாகர் மற்றும் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி 4வது ரயில்வே கேட்டில் வேன் மோதி விபத்து : கேட் தற்காலிகமாக மூடல்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 12:19:38 PM (IST)

பைக் விபத்து: மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 11:02:07 AM (IST)

கோவில் கொடை விழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு – 3 பேர் கைது!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:17:20 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு: திரேஸ்புரத்தில் அலைமோதிய கூட்டம்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:08:02 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: 5-ஆம் திருநாளில் கற்பக விருட்சம் - காமதேனு வாகனங்களில் வீதி உலா!
சனி 25, ஏப்ரல் 2026 9:36:06 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 30-ல் தேரோட்டம் – முன்னேற்பாடுகள் தயார்!
சனி 25, ஏப்ரல் 2026 7:35:52 PM (IST)







