» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 30-ல் தேரோட்டம் – முன்னேற்பாடுகள் தயார்!
சனி 25, ஏப்ரல் 2026 7:35:52 PM (IST)

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டத்திற்கான அனைத்துக் கட்ட முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகக் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதப் பெருந்திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
சித்திரை பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகள் குறித்துக் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி காலை நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு மங்கல இசை முழங்கத் தேரோட்டம் தொடங்கும். தேரோட்டத்தையொட்டி ரத வீதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பக்தர்களுக்குத் தடையின்றி குடிநீர் வழங்கவும், நிழற்பந்தல்கள் அமைக்கவும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது, கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் முருகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி 4வது ரயில்வே கேட்டில் வேன் மோதி விபத்து : கேட் தற்காலிகமாக மூடல்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 12:19:38 PM (IST)

பைக் விபத்து: மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 11:02:07 AM (IST)

கோவில் கொடை விழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு – 3 பேர் கைது!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:17:20 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு: திரேஸ்புரத்தில் அலைமோதிய கூட்டம்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:08:02 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: 5-ஆம் திருநாளில் கற்பக விருட்சம் - காமதேனு வாகனங்களில் வீதி உலா!
சனி 25, ஏப்ரல் 2026 9:36:06 PM (IST)

நாசரேத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம் தொடக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 9:29:37 PM (IST)







