» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் கொடை விழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு – 3 பேர் கைது!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:17:20 AM (IST)
தூத்துக்குடி அருகே கோவில் கொடை விழாவின் போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் - அத்திமரப்பட்டி சாலையில் உள்ள பொன் இசக்கியம்மன் கோவில் கொடை விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது, அத்திமரப்பட்டி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகன் சதீஸ்குமார் (24) என்பவருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே, அந்த இளைஞர் கும்பல் சதீஸ்குமாரை அத்திமரப்பட்டி கழிவு வாய்க்கால் அருகே வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமார் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்கப் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட முத்தையாபுரம் பாரதிநகரைச் சேர்ந்த மரிய தினேஷ், பாரதிநகரைச் சேர்ந்த விக்னேஷ், கோவங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர்,ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி 4வது ரயில்வே கேட்டில் வேன் மோதி விபத்து : கேட் தற்காலிகமாக மூடல்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 12:19:38 PM (IST)

பைக் விபத்து: மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 11:02:07 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு: திரேஸ்புரத்தில் அலைமோதிய கூட்டம்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 9:08:02 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: 5-ஆம் திருநாளில் கற்பக விருட்சம் - காமதேனு வாகனங்களில் வீதி உலா!
சனி 25, ஏப்ரல் 2026 9:36:06 PM (IST)

நாசரேத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கால்பந்து பயிற்சி முகாம் தொடக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 9:29:37 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா: ஏப்ரல் 30-ல் தேரோட்டம் – முன்னேற்பாடுகள் தயார்!
சனி 25, ஏப்ரல் 2026 7:35:52 PM (IST)







