» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 80.55% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:56:42 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் இறுதி வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் சராசரியாக 80.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 6 லட்சத்து 77 ஆயிரத்து 4 ஆண்கள், 7 லட்சத்து 10 ஆயிரத்து 981 பெண்கள், 201 இதரர் ஆக மொத்தம் 13 லட்சத்து 88 ஆயிரத்து 186 வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்க உள்ளனர். 

இதில் விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 982 பேரும், தூத்துக்குடியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 587 பேரும், திருச்செந்தூரில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 933 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 268 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 756 பேரும், கோவில்பட்டியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 660 வாக்காளர்கள் உள்ளனர்.

நேற்று காலை முதல் 6 தொகுதிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வயதானவர்கள், இளைஞர்களும் ஆர்வமுடன் வந்தனர். மக்கள் குடும்பத்தோடு வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை முதல் மதியம் வரை விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு, மாலையில் மந்தமாக நடந்தது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 80.54 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் காலை 9 மணிக்கு 18.31 சதவீதமும், 11 மணிக்கு 37.39 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 54.08 சதவீதமும், மாலை 3 மணிக்கு 66.25 சதவீதமும், 5 மணிக்கு 78.33 சதவீதமும், 6 மணிக்கு 80.92 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.

விளாத்திகுளம் தொகுதியில் காலை 9 மணிக்கு 16.51 சதவீதமும், 11 மணிக்கு 35.61 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 54.89 சதவீதமும், மாலை 3 மணிக்கு 68.90 சதவீதமும், 5 மணிக்கு 80.87 சதவீதமும், 6 மணிக்கு 84.16 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.

திருச்செந்தூர் தொகுதியில் காலை 9 மணிக்கு 16.45 சதவீதமும், 11 மணிக்கு 34.77 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 51.29 சதவீதமும், மாலை 3 மணிக்கு 63.76 சதவீதமும், 5 மணிக்கு 76.14 சவீதமும், 6 மணிக்கு 78.89 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காலை 9 மணிக்கு 14.87 சதவீதமும், 11 மணிக்கு 33.55 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 51.26 சதவீதமும், மாலை 3 மணிக்கு 64.44 சவீதமும், 5 மணிக்கு 78.02 சதவீதமும், 6 மணிக்கு 81.04 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் காலை 9 மணிக்கு 16.29 சதவீதமும், 11 மணிக்கு 34.34 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 51.24 சதவீதமும், மாலை 3 மணிக்கு 63.43 சதவீதமும், 5 மணிக்கு 76.32 சதவீதமும், 6 மணிக்கு 79.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.

கோவில்பட்டி தொகுதியில் காலை 9 மணிக்கு 17.05 சதவீமும், 11 மணிக்கு 35.12 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 52.66 சதவீதமும், மாலை 3 மணிக்கு 64.74 சதவீதமும், 5 மணிக்கு 76.16 சதவீதமும், 6 மணிக்கு 79.28 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory