» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூத-சிம்ம வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா : சித்திரை திருவிழாவில் 3-ஆம் நாள் கோலாகலம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 9:09:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
தூத்துக்குடியின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காலை, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர்.
சுவாமி சங்கர ராமேஸ்வர வலிமையின் அடையாளமான பூத வாகனத்தில் வீதி உலா வந்தார். அம்பாள் பாகம்பிரியாள் கம்பீரமான சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தார். வழக்கமான உற்சாகத்துடன் மேள தாளங்கள் முழங்க, விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும் அம்பாளும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தனர்.
தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே, பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் இணைந்து விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)







