» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!

வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.3.97 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் ஏப்ரல் 23, 2026 அன்று மாலை 6.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.3,97,06,126 மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், கணக்கில் காட்டப்படாத மொத்த ரொக்கத்தொகையாக ரூ.3,49,32,968-ம், பல்வேறு பொருட்கள் ரூ.38,42,212 மதிப்பிலும், மதுபானங்கள் ரூ.9,30,946 மதிப்பிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory