» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இயந்திரக் கோளாறால் இரவு 9 மணி வரை நீடித்த வாக்குப்பதிவு: டோக்கன் வாங்கி காத்திருந்த வாக்காளர்கள்!

வியாழன் 23, ஏப்ரல் 2026 9:01:08 PM (IST)

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் திடீரெனப் பழுதானதால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து இரவு 9 மணி வரை தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு இழந்த குளம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. ஆனால், மாலை 5 மணி அளவில் எதிர்பாராதவிதமாக அங்குள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) பழுதானது. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இயந்திரத்தைச் சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் உடனடியாக ஈடுபட்டனர். எனினும், வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 6 மணி நெருங்கியதால், வரிசையில் நின்றிருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் விதிமுறைப்படி டோக்கன்கள் வழங்கப்பட்டன. பின்னர் வாக்குச்சாவடியின் பிரதான நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டன.

தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் இயந்திரம் சரிசெய்யப்பட்ட பிறகு, இரவு 7 மணி அளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. டோக்கன் பெற்ற வாக்காளர்கள் அனைவரும் வரிசையாக வந்து வாக்களித்தனர். இந்த நடைமுறை முழுவதும் நிறைவடைய இரவு 9 மணி ஆனது.

இந்தத் தாமதம் காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவிகிதத்தை இறுதி செய்து வெளியிடுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வமான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியாக இரவு 11 மணி ஆகும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory