» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நிறைவுற்றது ஜனநாயகத் திருவிழா: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்! :மே 4-ல் முடிவுகள் அறிவிப்பு

வியாழன் 23, ஏப்ரல் 2026 8:04:42 PM (IST)

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் அமைதியான முறையில் நிறைவடைந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டனர். வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவி (Control Unit) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் (VVPAT) ஆகியவை பாதுகாப்பாகச் சீல் வைக்கப்பட்டன. முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்களின் எண்கள் சரிபார்க்கப்பட்டு, காப்பகங்களுக்குக் கொண்டு செல்லத் தயார் செய்யப்பட்டன.

6 மணி நிலவரப்படி  தூத்துக்குடி மாவட்டத்தில் 79.75% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.  சீல் வைக்கப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்தத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு (Strong Rooms) கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்புடன் இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும்.

மே 4-ல் தேர்தல் முடிவுகள்: தமிழகம் முழுவதும் இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ஆம் தேதி (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை வேட்பாளர்களின் வெற்றி தோல்வி இந்த மின்னணு இயந்திரங்களில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory