» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சமா? உணவு, குடிநீர் இன்றி வேதனை!
வியாழன் 23, ஏப்ரல் 2026 7:27:53 PM (IST)

விளாத்திகுளம் தொகுதியில் சட்டமன்றத் தேர்தல் பணிக்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உணவு, குடிநீர் மற்றும் ஊதியம் இன்றி தாலுகா அலுவலகத்தில் திரண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியாற்ற அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளத்தில் உள்ள வி.கே. முருகையா நாடார் திருமண மண்டபத்தில் 'ரிசர்வ்' (Reserve) பணியாளர்களாகத் தங்க வைக்கப்பட்டனர்.
இன்று காலை முதல் திருமண மண்டபத்தில் காத்திருந்த தங்களுக்குக் குடிநீர், காலை மற்றும் மதிய உணவு போன்ற எவ்வித அடிப்படை வசதிகளையும் தேர்தல் அதிகாரிகள் செய்து தரவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் காரணமாகப் பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், உணவு கிடைக்காமல் ஊழியர்கள் நீண்ட நேரம் பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தங்கியிருந்த பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் உணவு உடனுக்குடன் வழங்கப்பட்டுப் பாராட்டைப் பெற்ற நிலையில், விளாத்திகுளத்தில் மட்டும் அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்குத் தூத்துக்குடி மற்றும் எட்டயபுரம் உள்ளிட்ட பல இடங்களில் மாலை 6 மணிக்கே ஊதியம் (Remuneration) வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், விளாத்திகுளத்தில் இரவு 7 மணி ஆகியும் இதுவரை குடிநீரோ அல்லது பணிக்கான ஊதியமோ வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தற்போது விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் திரண்டு அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.
தேர்தல் நாளன்று தங்களின் கடமையை ஆற்ற வந்த அரசுப் பணியாளர்களைக் கனிவுடன் நடத்தாமல், பசியோடு காத்திருக்க வைத்துள்ள அதிகாரிகளின் போக்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)







