» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நான் ஓட்டு போடுவேன் விழிப்புணர்வு குறும்படம் : ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டார்

சனி 18, ஏப்ரல் 2026 5:39:53 PM (IST)



சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட "நான் ஓட்டு போடுவேன்" என்னும் விழிப்புணர்வு குறும்படத்தைத் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வாக்காளரின் வாக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்தி, சாத்தான்குளம் இளம் முன்னோடிகள் சங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் இணைந்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். வேளாண்மைத் துறையில் பணியாற்றி வரும் சரத்குமார் இயக்கியுள்ள இக்குறும்படத்தை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டார்.

இந்த விழிப்புணர்வு குறும்படம் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் என மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு அலுவலர் புவனேஷ் ராம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory