» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் - ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 18, ஏப்ரல் 2026 12:22:54 PM (IST)
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவரைக் கத்தியால் தாக்கி, அவரது இருசக்கர வாகனத்தைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பாத்திமா நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் மரிய சஞ்சய் (21). கீதா ஜீவன் நகரைச் சேர்ந்தவர் சிலுவை பிச்சை என்ற பிச்சையா (28). இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 4-ம் தேதி இரவு, மதுபோதையில் இருந்த பிச்சையா, மரியா சஞ்சய்யின் தெருவில் படுத்துள்ளார். இதனை கண்ட மரியா சஞ்சய் மற்றும் அவரது உறவினர்கள், பிச்சையாவை பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று படுக்க வைத்துள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 15-ம் தேதி இரவு 9:30 மணியளவில் மரியா சஞ்சயை சந்தித்த பிச்சையா, "நேற்று என் பையில் இருந்த 15,000 ரூபாயை நீதான் எடுத்தாய்" எனக் கூறி தகராறு செய்துள்ளார். தான் பணம் எதுவும் எடுக்கவில்லை என மரிய சஞ்சய் விளக்கமளித்தும், அதனை ஏற்காமல் பிச்சையா அவரைத் தாக்கி கீழே தள்ளியுள்ளார்.
மேலும், அங்கிருந்த மரிய சஞ்சய்யின் இருசக்கர வாகனத்தை கத்தியால் அடித்து சேதப்படுத்தியதோடு, அவரை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த மரியா சஞ்சய், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மரியா சஞ்சய் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் ஓட்டு போடுவேன் விழிப்புணர்வு குறும்படம் : ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டார்
சனி 18, ஏப்ரல் 2026 5:39:53 PM (IST)

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வருகை: முழு பயண விவரம்!
சனி 18, ஏப்ரல் 2026 5:18:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட்த்தில் ரூ.1.29 கோடி பறிமுதல் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
சனி 18, ஏப்ரல் 2026 3:51:06 PM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோவிலில் ஏப். 23-ல் கும்பாபிஷேக விழா!
சனி 18, ஏப்ரல் 2026 3:40:26 PM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் கொண்டாட்டம்
சனி 18, ஏப்ரல் 2026 3:19:09 PM (IST)

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு
சனி 18, ஏப்ரல் 2026 3:11:33 PM (IST)





