» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு
சனி 18, ஏப்ரல் 2026 3:11:33 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், இன்று தூத்துக்குடியில் உள்ள பழமையான ஜாமியா பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக, அந்த பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமிய மக்களிடம், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது, அதிமுக ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து சி.த.செல்லப்பாண்டியன் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அதற்கு அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வேட்பாளரின் கோரிக்கையை ஏற்று, அங்கிருந்த இஸ்லாமியப் பெரியவர்கள் அவருக்குச் சால்வை அணிவித்துத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மைதீன், அசன், நவ்சாத், அபுதாஹிர், ராஜகோபால், ஜீவாபாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்குத் தீவிரமாக வாக்கு சேகரித்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இந்த பரப்புரை அமைந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் ஓட்டு போடுவேன் விழிப்புணர்வு குறும்படம் : ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டார்
சனி 18, ஏப்ரல் 2026 5:39:53 PM (IST)

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வருகை: முழு பயண விவரம்!
சனி 18, ஏப்ரல் 2026 5:18:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட்த்தில் ரூ.1.29 கோடி பறிமுதல் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
சனி 18, ஏப்ரல் 2026 3:51:06 PM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோவிலில் ஏப். 23-ல் கும்பாபிஷேக விழா!
சனி 18, ஏப்ரல் 2026 3:40:26 PM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் கொண்டாட்டம்
சனி 18, ஏப்ரல் 2026 3:19:09 PM (IST)

ராகுல் காந்தி ஏப்.20-ம் தேதி தூத்துக்குடி வருகை: ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம்!
சனி 18, ஏப்ரல் 2026 12:37:52 PM (IST)





