» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வருகை: முழு பயண விவரம்!

சனி 18, ஏப்ரல் 2026 5:18:59 PM (IST)

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வருகிறார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (18.04.2026) இரவு 7:30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

நாளை (19.04.2026) காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் அவர், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்துப் காலை 10:00 மணிக்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் 

வாசுதேவநல்லூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் அவர், காலை 11:50 மணிக்குத் திருச்செந்தூர் வந்தடைகிறார். மதியம் 12:30 மணிக்குத் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்குள்ள விடுதியில் மதிய உணவு மற்றும் ஓய்விற்குப் பிறகு, மதியம் 2:45 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார்.

மதியம் 3:00 மணிக்கு மகேந்திரகிரியில் உள்ள ஹெலிபேடில் இறங்கி, ராதாபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்துப் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். தென் மாவட்டப் பயணங்களை முடித்துக் கொண்டு, மாலை தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அவர் மேற்கு வங்க மாநிலத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory