» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோவிலில் ஏப். 23-ல் கும்பாபிஷேக விழா!
சனி 18, ஏப்ரல் 2026 3:40:26 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு நல்லாண்பிள்ளை பெற்ற குணவதி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
தாமிரபரணி ஆறு வடக்கிலிருந்து தெற்காகப் பாய்வதால் 'தட்சிண கங்கை' எனப் போற்றப்படுகிறது. இதன் காரணமாக முறப்பநாடு 'தென்னகத்தின் காசி' என அழைக்கப்படுவது போலவே, தாமிரபரணி நதி வடக்கிலிருந்து தெற்காகப் பாயும் முத்தாலங்குறிச்சியும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கு அம்மன் வடக்கு நோக்கி வீற்றிருக்க, வடக்கிலிருந்து ஓடிவரும் தாமிரபரணி அன்னை அம்மனைத் தரிசித்துச் செல்வது தனிச்சிறப்பாகும். இக்கோவிலின் சிறப்புகளை டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்ட ஆன்மீக எழுத்தாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும் 21-ஆம் தேதி காலை 6:30 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெறவுள்ளன. அன்று மாலை 5:00 மணிக்கு கடம் யாகசாலை பிரவேசமும், இரவு 9:30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.
தொடர்ந்து 22-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். அன்றைய தினம் இரவு யந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறவுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 10:00 மணிக்கு யாத்ராதானம் மற்றும் கடம் எழுந்தருளலும் நடைபெறும். காலை 10:15 மணிக்கு மேல் குணவதி அம்மன் திருக்கோவில் விமான கோபுரம் மற்றும் மூலவர் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
நண்பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
இந்த வைபவத்திற்கான பூஜைகளைச் சிவஸ்ரீ செல்வம் பட்டர் (எ) கல்யாண சுந்தர சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் பக்த ஜன சங்கத்தினர், ஊர் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் ஓட்டு போடுவேன் விழிப்புணர்வு குறும்படம் : ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டார்
சனி 18, ஏப்ரல் 2026 5:39:53 PM (IST)

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வருகை: முழு பயண விவரம்!
சனி 18, ஏப்ரல் 2026 5:18:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட்த்தில் ரூ.1.29 கோடி பறிமுதல் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
சனி 18, ஏப்ரல் 2026 3:51:06 PM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் கொண்டாட்டம்
சனி 18, ஏப்ரல் 2026 3:19:09 PM (IST)

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு
சனி 18, ஏப்ரல் 2026 3:11:33 PM (IST)

ராகுல் காந்தி ஏப்.20-ம் தேதி தூத்துக்குடி வருகை: ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம்!
சனி 18, ஏப்ரல் 2026 12:37:52 PM (IST)





