» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தல்: நாசரேத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
சனி 18, ஏப்ரல் 2026 10:53:16 AM (IST)

சட்டமன்றத் தேர்தலையொட்டி, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பாகத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், நாசரேத்தில் ஆயுதம் ஏந்திய போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயமின்றி வாக்களிப்பதற்கான சூழலை உருவாக்க மாவட்டக் காவல் துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நாசரேத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஆவுடையப்பன் இந்த அணிவகுப்பைத் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த அணிவகுப்பு, சந்தி பஜார் மற்றும் பஸ் நிலையம் வழியாகச் சென்று காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.
இந்த அணிவகுப்பில் மெஞ்ஞானபுரம் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சாத்தான்குளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, எஸ்.ஐ-க்கள் முரளி, சத்தியமூர்த்தி, ஜோசப் கிங், செல்வராஜ், ஞானசேகர் மற்றும் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர். ஆயுதம் ஏந்திய சிறப்பு காவல் படையினரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றுப் பாதுகாப்பு பலத்தை உறுதிப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் ஓட்டு போடுவேன் விழிப்புணர்வு குறும்படம் : ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டார்
சனி 18, ஏப்ரல் 2026 5:39:53 PM (IST)

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வருகை: முழு பயண விவரம்!
சனி 18, ஏப்ரல் 2026 5:18:59 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட்த்தில் ரூ.1.29 கோடி பறிமுதல் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
சனி 18, ஏப்ரல் 2026 3:51:06 PM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோவிலில் ஏப். 23-ல் கும்பாபிஷேக விழா!
சனி 18, ஏப்ரல் 2026 3:40:26 PM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் கொண்டாட்டம்
சனி 18, ஏப்ரல் 2026 3:19:09 PM (IST)

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரிப்பு
சனி 18, ஏப்ரல் 2026 3:11:33 PM (IST)





