» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் : டி.டி.வி. தினகரன் பேச்சு!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:27:05 AM (IST)



"மக்கள் விரோத திமுகவை வீழ்த்த இணைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆர். சுந்தரராஜை ஆதரித்து வல்லநாடு பகுதியில் டி.டி.வி. தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகம் போதைப்பொருட்களின் சந்தையாக மாறிவிட்டது. ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என திமுக பகல் கனவு காண்கிறது.

இப்பகுதியில் போக்குவரத்து பணிமனை, கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும், செக்காரக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி மற்றும் கலைக் கல்லூரி அமைக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகள் உடனடியாக மூடப்படும்.

ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம்: தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்துப் பிரசாரம் செய்த அவர்: "2021-ல் நாங்கள் பிரிந்து இருந்ததால் திமுக வெற்றி பெற்றது. இப்போது கருத்து வேறுபாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் விரோத திமுகவை வீழ்த்த இணைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும்," என தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 25,000 ஏக்கரில் நடைபெறும் வாழை சாகுபடியைக் கருத்தில் கொண்டு, வாழை சார்ந்த பிரத்யேக சந்தை அமைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்தப் பிரசாரத்தின் போது அதிமுக ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், அமமுக மாவட்ட நிர்வாகிகள் சங்கரலிங்கம், சிவராமலிங்கம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory