» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேருந்து மோதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:21:37 PM (IST)
தூத்துக்குடியில் தனியார் பேருந்து மோதிய விபத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்துக் கிருஷ்ணாபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அழகுபாண்டியன் (68). இவர் சிபிஎம் கட்சியின் மூத்த முன்னோடியாகவும், அக்கட்சியின் கிளைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். மேலும், இவர் நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார்.இன்று காலை 10 மணியளவில், அழகுபாண்டியன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டுத் திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். சத்யா நகர் அருகே அவர் சென்றபோது, திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து, எதிர்பாராதவிதமாக இவரது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அழகுபாண்டியனை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூத்த கட்சி நிர்வாகியின் மறைவு கட்சித் தொண்டர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)







