» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு : தூத்துக்குடியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:55:23 PM (IST)

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் இச்செயலைக் கண்டித்து வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
முதல்வரின் அழைப்பை ஏற்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் மீராசா தலைமையில் தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு, ஜெய்லானி தெரு, எம்.கே. தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சியினர் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றுத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)







