» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 2,795 தபால் வாக்குகள் பதிவு: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 10:27:22 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2,795 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் 1, 2, 3 ஆகியோருக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள் 15.04.2026 அன்று நடைபெற்றன. இந்தப் பயிற்சி மையங்களில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்காகத் தபால் வாக்கு வசதி மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்குகள் பெறப்பட்டன.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியாகப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விளாத்திகுளம் தொகுதிக்குப் பயிற்சி மையமாக குமாரகிரி சி.கே.டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும், தூத்துக்குடி தொகுதிக்குக் காமராஜ் கல்லூரியும் ஒதுக்கப்பட்டிருந்தன. திருச்செந்தூர் தொகுதிக்கு ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு நாசரேத் மர்காசியஸ் கல்லூரியிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியும், கோவில்பட்டி தொகுதிக்கு நாடார் மேல்நிலைப்பள்ளியும் பயிற்சி மையங்களாகச் செயல்பட்டன. இந்த மையங்களில் முறையே விளாத்திகுளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளுக்கு தலா 3 வசதி மையங்களும், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு தலா 2 வசதி மையங்களும், திருச்செந்தூர் மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு தலா ஒரு வசதி மையமும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த வசதி மையங்களில் 15.04.2026 அன்று பதிவான தபால் வாக்குகளின் அடிப்படையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிகபட்சமாக 685 வாக்குகளும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 514 வாக்குகளும் பதிவாகியுள்ளன. விளாத்திகுளம் தொகுதியில் 487 வாக்குகளும், கோவில்பட்டி தொகுதியில் 462 வாக்குகளும், திருச்செந்தூர் தொகுதியில் 344 வாக்குகளும் பதிவாகின. தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 303 வாக்குகள் பெறப்பட்டன.
மாவட்டம் முழுவதும் உள்ள இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்களிடமிருந்து 1,422 வாக்குகளும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களிடமிருந்து 1,373 வாக்குகளும் பெறப்பட்டன. ஒட்டுமொத்தமாக நேற்று ஒரே நாளில் பயிற்சி மையங்களில் 2,795 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)







