» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது : திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

வியாழன் 16, ஏப்ரல் 2026 8:22:57 AM (IST)



"தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன" எனப் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே அதிமுக வேட்பாளர் கடம்பூர் செ. ராஜு மற்றும் விளாத்திகுளம் வேட்பாளர் ஆர். சத்யாவை ஆதரித்துப் பேசிய அண்ணாமலை: "தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் 8,008 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் திமுக அரசின் சாதனை," என விமர்சித்தார். மேலும், கோவில்பட்டி பகுதி ரேஷன் அரிசி கடத்தலின் தலைநகராக மாறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு கோவில்பட்டிக்குச் செய்த நன்மைகளைப் பட்டியலிட்ட அவர்: தீப்பெட்டி மீதான GST வரி 18%-லிருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டதில் பாஜக மற்றும் கடம்பூர் ராஜுவின் பங்கு முக்கியமானது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்குப் புவிசார் குறியீடு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. வந்தே பாரத் உள்ளிட்ட 5 ரயில்கள் கோவில்பட்டியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் 3.21 லட்சம் குடும்பங்களுக்குக் குடிநீர் இணைப்பும், பி.எம் கிசான் திட்டத்தில் 48,800 விவசாயிகளுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சித் தலைவராகச் சரியாகச் செயல்படாத திமுக வேட்பாளர் கா. கருணாநிதிக்கு மக்கள் தோல்வியைப் பரிசாக அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், கால்நடை ஆராய்ச்சி நிலையம், செவிலியர் கல்லூரி போன்ற அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கி வைத்துள்ளதாகச் சாடினார்.

"மத்திய அரசின் நலத்திட்டங்கள் தொடரவும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்" என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார். இந்தச் சந்திப்பில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory