» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:53:45 PM (IST)



தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலையத்தில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி, தீ விபத்து மற்றும் மீட்புப் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி, தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிலைய போக்குவரத்து அலுவலர் புன்னவன கட்டி முன்னிலை வகித்தார். பணியின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த வீரவணக்க நிகழ்வில் நிலையப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory