» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியுடன் தகராறு: கணவர் தூக்கிட்டு தற்கொலை!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:56:56 AM (IST)
உடன்குடி அருகே மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள சிவலூர், மணங்கொண்ட அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் பிரபு (33). பிரபு கட்டிடக் கூலி வேலை செய்து வந்தார். இவருக்குச் சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையான பிரபு, அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் அவருக்கும், அவரது மனைவி சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. வழக்கம்போல் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் மனவேதனையில் இருந்த பிரபு, நேற்று இரவு தனது வீட்டிற்கு அருகில் இருந்த கருவேல மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை : ஆட்சியர் நேரில் ஆய்வு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:17:50 AM (IST)







