» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் சித்திரை விசு கனி காணும் நிகழ்வு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:55:31 AM (IST)
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சித்திரை விசு கனி காணும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் உச்சிகால அபிஷேகங்கள் சீரும் சிறப்புமாக நடைபெற்றன.
காலை 10:00 மணிக்கு சண்முகருக்கு விசேஷ அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் ஆகம விதிகளின்படி நடைபெற்றன. புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதலே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், கோவிலில் உள்ள நாழிக்கிணறிலும் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோவிலின் உள் பிரகாரத்தில் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஒரு பெரிய கண்ணாடியின் முன்பு மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனிகள், நவதானியங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வைக்கப்பட்டிருந்தன. புத்தாண்டு தினத்தில் இவற்றைக் காண்பது அதிர்ஷ்டம் தரும் என்பதால், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இதனை வழிபட்டுச் சென்றனர்.
புத்தாண்டு சிறப்புப் பூஜைகளுக்கான ஏற்பாடுகளைத் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் பாதுகாப்பு மற்றும் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தேர்தல் விதிமீறல்: ரூ.3.97 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:39:31 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை : ஆட்சியர் நேரில் ஆய்வு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:17:50 AM (IST)







